Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…நினைத்தது நடக்கும்…உற்சாகமாக காணப்படுவீர்கள்…!!

 

ரிஷபம் ராசி அன்பர்களே …!!  இன்று உங்களுடைய செயல்களில் அதிகம் நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டாகும்.தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் லாபமும் நல்லபடியாக வரும்.

பாக்கிகள் ஓரளவு வசூலாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணிகளால் கொஞ்சம் டென்ஷன் இருக்கும். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவியும் கிடைக்கும்.இன்று சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள்.நீங்கள் நினைத்தது நடக்கும்.உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ரொம்ப சிறப்பாக இருக்கும் உற்சாகமாகவும் இன்று நீங்கள் காணப்படுவீர்கள். காதலர்களுக்கு இன்று வாக்குவாதங்கள் நிரைந்த நாளாகவே இருக்கும்.

தேவையில்லாத விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் கூடுமானவரை கொஞ்சம் அமைதியாகவே இருப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். எந்தவித பிரச்சினையும் இல்லை, இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை

Categories

Tech |