Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் வேலைக்கு போங்க….! தடையை உடைத்த எடப்பாடி … தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்.!!

மே 3ம் தேதி வரை யாரெல்லாம் வேலைக்கு செல்லலாம் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கியது முதல் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த மக்களும் இன்றுவரை வீட்டிற்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவையை தவிர பிற காரணங்களுக்காக வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நிலையில் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஊரடங்கு தளர்வு : 

குறிப்பாக தின கூலிகளாக இருக்கும் மக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசம் அடைந்தது, எப்போது நாம் வேலைக்கு செல்வோம் ? எப்போது கொரோனா குறையும் ? என்று பல்வேறு கற்பனைகளுக்கு இடையே தமிழக முதலமைச்சர் தற்போது பிறப்பித்துள்ள இந்த உத்தரவு ஒட்டுமொத்த மக்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மத்திய அரசாங்கம்  மே 3 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த போதும்  ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் சில தளவுகள் இருக்கும் என்று அறிவித்தது. 

நம்பிக்கைக்கு செக் : 

ஏற்கனவே 21 நாள் ஊரடங்கில் முடங்கியிருந்த மக்கள் 20ஆம் தேதியில் ஏற்படும் ஊரடங்கு தளர்வை எதிர்பார்த்து காத்திருந்தனர். நம்முடைய வாழ்வாதாரம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளை 20ம் தேதிக்குப் பின் இருக்கும் தளர்வில் ஈடு செய்து கொள்ளலாம் என்றெல்லாம் பல்வேறு கற்பனைகளில் இருந்த மக்களுக்கு செக் வைக்கும் விதத்தில் மாநில அரசாங்கமும் ஊரடங்கில் எந்த தளர்வும் கிடையாது, ஊரடங்குச் தொடரும் என்று அறிவித்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தற்போது தமிழக மக்களை உற்சாகப்படுத்த கூடிய ஒரு புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 20ம் தேதி தளர்வு குறித்து ஆய்வு செய்ய 17 நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது.

எதற்கு அனுமதி ? 

அந்த குழுவின் பரிந்துரையின்படி இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைவாய்ப்பு செல்ல எந்த தடையும் கிடையாது. கட்டுமானம், பள்ளி கட்டுதல் , மருத்துவமனை கட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு தடை இல்லை அதோடு மின்சாரம்,  குடிநீர் சம்பந்தமான பல்வேறு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கியது. அத்தோடு இல்லாமல் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்தது.

தலையில் தூக்கி வைத்து கொண்டாட்டம் : 

ஊரடங்கினால் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ள வேதனையில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மக்களின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு, குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டமைப்பதற்கும் உதவக்கூடிய ஒரு மகிழ்ச்சியான உத்தரவு  மக்கள் இதனை பார்க்கின்றனர். இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் முதல்வரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு அமைந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு பல்வேறு பாராட்டத்தக்க வகையிலான  உத்தரவுகளை பிறப்பித்து வருவது அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

Categories

Tech |