கடகம் ராசி அன்பர்களே …!! இன்று முக்கிய செயலை தயவுசெய்து மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம்.சுவை தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்.அளவான பணவரவு தான் கிடைக்கும்.ஒவ்வாத உணவுகளை தயவு செய்து சேர்த்து கொள்ள வேண்டாம்.இன்று எதையும் ஆராய்ந்து பார்த்து பின்னர் அதில் ஈடுபடுவது ரொம்ப நல்லது.
ஆன்மிக பணியில் நாட்டம் செல்லும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலம் ஓரளவு உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். வீடு வாகனங்கள் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது பொறுமையாகவும்,நிதானமாகவும் செல்லுங்கள்.இன்று காதலர்கள் தயவுசெய்து வாக்குவாதத்தில் ஏதும் ஈடுபடவேண்டாம்,பொறுமையை கடைபிடியுங்கள்.
தன வரவில் சில மாற்றங்கள் இருந்தாலும் கவலை வேண்டாம் சிறப்பாக இருக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தி கொடுக்கல் வாங்கல் ஏதும் செய்ய வேண்டாம்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்