Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…வாழ்க்கை தரம் உயரும்…தெய்வ பக்தி அதிகரிக்கும்…!!

 

கன்னி ராசி அன்பர்களே …!!  சிலர் எதிர்பார்ப்புடன் இன்று உங்களை அணுக கூடும். முன்யோசனையுடன் அவரிடமிருந்து விலகிச் செல்வது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க அதிகமாகத்தான் பணிபுரிய வேண்டும்.அளவான பணவரவு தான் கிடைக்கும்.அதிக பயன் தராத பொருட்களையும் விலைக்கு வாங்க வேண்டாம்.இன்று காரியத் தடங்கல்கள் உண்டாகி பின்னர் சரியாகும்.

நல்ல பலன்கள் உங்களை தேடி வரக்கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்.,பயணங்கள் செல்லும்போது மட்டும் கவனம் இருக்கட்டும். மனக்கவலை நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரமும் உயரும்.இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். யாரிடமும் பாதகங்கள் மட்டும் செய்யாமல் இருந்தாலே என்று போதுமானதாக இருக்கும்.

பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |