விருச்சிகம் ராசி அன்பர்களே..! இஷ்ட தெய்வ அருளால் உங்களுக்கு அத்தனை விதமான நன்மைகளும் உருவாகும். இயற்கை சூழ்நிலைகள் உடன் இயல்பாக வாழ்க்கை நடத்தியவர்கள் சரியான சூழ்நிலைகளை என்று புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படுகிறீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஒரு வியப்பூட்டும் வகையில் இருக்கும். மனைவி விரும்பி கேட்டு பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் சரியாகும் தேவைகளும் பூர்த்தியாகும். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவுகள் எடுக்க கூடிய சூழல் அமையும்.
பணவரவும் இருக்கும். மனம் மகிழும் சம்பவங்களும் நடக்கும் வெளியூர் பயணங்களின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். மிக முக்கியமான பயணங்களால் இருந்தால் மட்டுமே வெளியில் செல்வது ரொம்ப நல்லது. அதேபோல புதிய நபரிடம் உரையாடும் போதும் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். பெரிய முதலீடுகளை தயவுசெய்து இப்போதைக்கு பயன்படுத்த வேண்டாம், அந்த விஷயத்தில் பொறுமையாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை சரியாகவே இருக்கும்.
இன்று வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் இருக்கும். உணவில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள், அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும் .
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.