Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…மனதில் தெளிவு பிறக்கும்… காரியங்கள் வெற்றியாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே ..! இன்று மனதில் பல நாள் இருந்த கவலை நீங்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்ற சிந்தனை மேற்கொள்வீர்கள். பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியும் இருக்கும். இன்று மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உருவாகும். இழுபறியாக இருந்த காரியங்களும் சாதகமாகவே முடியும். எடுத்த காரியங்களில் வெற்றி இருக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வீர்கள்.

மனதையும் உற்சாகமாக வைத்துக் கொள்வீர்கள். இன்று மேலிடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் உங்கள் வீடு தேடி வரும். அது உங்களுக்கு மிகப்பெரிய அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தும். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் செய்வது ரொம்ப நல்லது. உடல் மீதும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். பச்சை உங்களுக்கு எப்பொழுதுமே அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டுமில்லை  இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: வடக்குத் திசை

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்டநிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |