Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…திறமை வெளிப்படும்.. திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே …!! இன்று உங்களுடைய செயல்களில் அபாரமான திறமை இருக்கும்.  தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும்.வர வருமானம் வந்து சேரும். பெற்றோரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாரிடம் கலகலப்பாக இந்தக் கொள்கை பிடிப்போடு செய்லபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். புதிய நபரிடம்  உரையாடும் பொழுது ரொம்ப கவனம் இருக்கட்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாகவே இன்று நடந்து முடியும். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். தொழிலில் பெரிய முதலீடை இப்போதைக்கு பயன்படுத்த வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. சுமுகமாகவே செல்லும். ஆனால் உணவு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருங்கள். இன்று காதலர்களுக்கு பொன்னான நாளாக இருக்கும்.

காதலர்கள் நினைத்தது நடக்கும் நாளாகவும் இருக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் கொண்டவர்களுக்கு இன்று நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறும். இதனால் அவர்கள் மகிழ்ச்சி பெறுவார்கள். தொழிலில் சில புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை இல்லாத நபர்களுக்கு வேலைக்கான அஸ்திவாரம் கிடைக்கக்கூடிய சூழல் இன்று இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்.

Categories

Tech |