Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 400ஆக அதிகரிப்பு!

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு கொரோனா பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் 33 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. 23 மையங்கள் அரசு மருத்துவமனையிலும், 10 மையங்கள் தனியார் மருத்துவமனையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 23,303 பேரும் அரசு கண்காணிப்பில் 106 பேர் உள்ளனர். மேலும் 87,159 பேர் வீட்டு கண்காணிப்பை முடித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |