Categories
தேசிய செய்திகள்

கடந்த 14 நாட்களாக 78 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை

கடந்த 28 நாட்களுக்கு மேலாக சுமார் 12 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, கடந்த 14 நாட்களில் சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 78 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என இணை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். அதேபோல நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 4.5% ஆக அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 30வது நாளாக தற்போது அமலில் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 34 பேர் இன்று இறந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21700 ஆக அதிகரித்துள்ளது.

அதில், தற்போது 16689 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4,325 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, கொரோனா பாதிப்பு மே 3ம் தேதிக்குள் குறையலாம் அல்லது எப்போது குறையும் என்று கூறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |