Categories
உலக செய்திகள்

ஆளப்போவது யார் மனைவியா…? சகோதரியா…? வடகொரியாவில் பரபரப்பு …!!

வடகொரியாவில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது கிம்மின் தங்கையா அல்லது மனைவியா என்னும் பட்டிமன்றத்தை சர்வதேச ஊடகங்கள் நடத்தி வருகின்றது

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்க உளவு நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது ஆனால்  கிம் ஜாங் உடல்நிலை  மோசமாக இருப்பதாக வந்த தகவல் அமெரிக்கா கிளப்பிவிட்ட புரளியாக இருக்கும் என சர்வதேச நிபுணர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிம் உடல்நிலை மிகவும் மோசமானதாகவும் அவர் பிழைப்பார் என்பதே சந்தேகம் என்ற தகவல் பரவியுள்ளது. ஆனால் சீனாவும் தென் கொரியாவும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மற்றொருபுறம் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உடல்நிலை மோசமாக உள்ளது அடுத்து ஆட்சி அமைக்கப்போவது தங்கை என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில் பலரும் அறியாத கிம் மனைவி குறித்த சில தகவல்கள் சர்வதேச ஊடகங்கள் சேகரிக்க தொடங்கியுள்ளன.

கிம் மனைவி பெயர் ரி சோல் ஜூ. விளையாட்டுப் போட்டி ஒன்றில் சியர் லீடராக இருந்த ரி சோல் ஜூவை பார்த்த கிம் ஜாங் அவரை  காதலித்து தந்தை சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தந்தை மீது எவ்வளவு பாசம் மரியாதை கிம் ஜாங் உன்னுக்கு உள்ளதோ அதே அளவு பாசம் தங்கையின் மீதும் வைத்துள்ளார். தந்தை மரணத்திற்குப் பின்னரே கிம் ஜாங் உன் தங்கை கிம் யோ ஜாங் வெளி உலகிற்கு வந்துள்ளார். தந்தையின் இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பொழுது அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தது கிம் தங்கை யோ தான்.

தந்தையின் இறப்பிற்குப் பிறகு கிம்மிடம் ஆட்சி வந்தது. ஆட்சியில் தேவைப்படும் ஆலோசனைகளை மனைவியைவிட தங்கை யோவிடமே கேட்டு வந்துள்ளார். தங்கையும் அண்ணனுக்கு ஆட்சி நடத்த பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அண்ணன் தங்கை இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து ஆட்சியை நல்ல முறையில் கொண்டு போவதை தள்ளி நின்று ரசித்துக் கொண்டிருப்பவர் தான் கிம் மனைவி ரி.

ரி சோல் ஜூவின்  தந்தை பேராசிரியர், தாய் மருத்துவர். இப்படி ஒரு அறிவுஜீவி குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் ரி சோல் ஜூ.  பாட்டு, நடனம் என பல திறமைகள் கொண்ட ரி சோல் ஜூ தன்னை வெளியுலகுக்கு காட்டிக்கொள்ள விரும்பாதவர். கணவருக்கு தேவையானதை செய்து கொடுத்து தனது மூன்று குழந்தைகளையும் பார்த்துக் கொள்பவர். கணவரின் வேலையில் தலையிடுவதை விட குடும்பத்தோடு இருப்பதே மிகவும் ரிக்கு மிகவும் பிடித்ததாம்.

கிம் ஜாங் உன்னுக்கு திருமணம் முடிந்த தகவலே வெளியுலகிற்கு 2011ஆம் ஆண்டு தான் தெரியவந்துள்ளது. அதுவும் கிம்மின் தந்தை கிம் ஜாங் இல் மரணமடைந்ததை அடுத்து வெளியுலகுக்கு கிம்மின் மனைவி ரி சோல் ஜூவின் முகம் தெரிய வந்துள்ளது. கிம் மற்றும் ஜூவுக்கு 2009 இல் திருமணம் நடந்துள்ளது. ஆனால் சிலர் 2010 என்று சொல்கிறார்கள் இதுவரை திருமணம் குறித்து கிம் பேசியது இல்லை. அப்படி ஒரு ரகசியமான நாடுதான் வடகொரியா.

ஆணாதிக்கம் நிறைந்த நாடு தான் வடகொரியா. வீட்டிலும் வெளியிலும் பெண்களுக்கு சம உரிமை கிடையாது. அதன் காரணமாகவே கிம் மனைவி மற்றும் தங்கை குறித்த பெரிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. தற்போது இருக்கும் சூழலில் கிம்மின் நிலை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. அவரது மனைவி எங்கிருக்கிறார் என்றும் தெரியாத சூழலில் வடகொரியாவில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது கிம்மின் மனைவியா அல்லது தங்கையா என பட்டிமன்றமே நடத்திவருகின்றனர் சர்வதேச ஊடகங்கள்.

Categories

Tech |