எளிதாக கிடைக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய காய்கறிகள் என்ன என்பதை பார்ப்போம்.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்ஸை கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்து வரும் கொரோனாவை நிரந்தரமாக விரட்டி அடிக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று போராடி வருகின்றன. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதனை நிரந்தரமாக உலகை விட்டு விரட்டுவது கேள்விக்குறியாக இருந்தாலும், கட்டுப்படுத்தும் வழியை உலக நாடுகள் பின்பற்றுகின்றன.
உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின் படி சமூக விலகலை கடைப்பிடித்து உலக நாடுகளே இன்று ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றது. அதே வேளையில் கொரோனா வைரஸால் ஏற்படும் அதிக உயிரிழப்புகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களாக இருப்பதை விளக்கும். உலக சுகாதார நிறுவனம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய வகையில் நாம் அனைவரும் உடலை பராமரிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
இதனால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட முதியவர்களும் குணமடைந்து வந்துள்ளனர். எனவே நாம் ஒவ்வொருவரும் எளிதாக நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய காய்கறிகள், பழங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
காய்கறிகள்:
- முட்டைகோஸ்
- கேரட்
- கத்தரிக்காய்
- குடைமிளகாய்
- ப்ராக்கோலி
- காலிஃப்ளவர்
- பாலக்கீரை
- பசலைக்கீரை
பழங்கள்:
- ஆரஞ்சு பழம்
- தக்காளி பழம்
- கொய்யாப்பழம்
- பப்பாளி பழம்
- அன்னாசி பழம்
- எலுமிச்சை பழம்
- கிவி
- மலை நெல்லிக்காய்
- நாவல்பழம்
- ஊறவைத்த பாதாம்
- வால்நட்ஸ்
எடுத்துக்கொள்ளுங்கள் நிறைய தண்ணீர் குடியுங்கள். ரொம்ப முக்கியமானது இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள் இதை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.