Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் எளிதில் அழிக்க முடியாது – உலக சுகாதார நிறுவனம்..!!

கொரோனா வைரஸ் தொற்றை எளிதில் அழிக்க முடியாது என்று நீண்ட நாட்கள் இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரப்பி வருகிறது. பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோயை கையாளுவதற்கான ஆரம்ப கட்டத்திலேயே உள்ளனர். இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர்  கொரோனா வைரஸ் பரவாது என நினைத்த நாடுகளிலும் கொரோனா தொற்று பரவி வருவதாக கூறினார்.

ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும்  கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையான சேதம் ஏற்பட்டு வரும் நிலையில் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பாவில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் கூறிய உலக சுகாதார நிறுவன தலைவர் கொரோனா வைரஸ் எளிதில் அழிக்க கூடியதாக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் பயணிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |