சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ் நாட்டுக்கு வந்ததிலிருந்து அடுத்தடுத்து தமிழில் ட்விட் செய்து ஹர்பஜன் சிங் அசத்தி வருகிறார்.
12 -ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பெருமளவில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங் கடந்த ஆண்டு முதல் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார். சென்னை அணிக்கு வந்ததும் ரசிகர்களை கவரும் வகையில் ட்விட்டரில் தமிழ்நாட்டில் அதிகமாக கொண்டாடப்படும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கும், அவ்வப்போது தமிழ் நாட்டின் பிரச்சனையை பற்றியும் தமிழில் ட்விட் செய்து அசத்தியுள்ளார்.
சென்னை வந்ததும் ஹர்பஜன்சிங் தமிழில் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குரிய என்னருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களே மீண்டும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன்.ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான் அதே உணர்வு தான் என்னுள் இப்போது”என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா. தல டோனி பாட்டு போட நான் முரளி விஜய், கேதார் ஜாதவ் டான்சு ஆட ஒரே டமாசுதான் போங்க.ரெண்டு மாசமும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான். ஆனா ஆட்டம்னு வந்துட்டா பாக்கதான போறீங்க இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தை என்று ட்விட் செய்திருந்தார்.
வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா. தல @msdhoni பாட்டு போட நான் @mvj888 @JadhavKedar டான்சு ஆட ஒரே டமாசுதான் போங்க.ரெண்டு மாசமும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.ஆனா ஆட்டம்னு வந்துட்டா பாக்கதான போறீங்க இந்த @ChennaiIPL லோட ஆட்டத்த #YelloveAgain pic.twitter.com/V0OzWbjgNT
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 16, 2019
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
@chennaipipl நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே செம பீலிங் வித் மச்சான் @msdhoni மாப்ள @ImRaina #thala #chinnathala #WhistlePoduArmy pic.twitter.com/L9z8C7tYux— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 17, 2019