Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23ஆயிரத்தை கடந்தது …!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23ஆயிரத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் சமூக விலகலே தீர்வு என்பதை வலியுறுத்தி மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றன. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

தினமும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகும். இன்று காலை வெளியான தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23ஆயிரத்தை தாண்டியுள்ளது. 23,077 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு 718 பேர் உயிரிழந்துள்ளனர். மகிழ்ச்சியளிக்கும் வகையில் 4749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்ராவில் 6430 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |