Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேற்று கொரோனா உறுதி… சிகிச்சை பலனளிக்கவில்லை.. மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகரின் தாயார் பலி!

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அர்ச்சகரின் தாயாருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

இதனை தொடர்ந்து அவர் நேற்று மதுரை ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். 71 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று, மூதாட்டிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூதாட்டியுடன் வசித்த அர்ச்சகர்கள் உள்ளிட்ட 7 பேரும் பரிசோதனைக்காக மதுரை கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, மதுரை மேலமாசி வீதியில் பாதிக்கப்பட்டவரின் வீடு உள்ள பகுதிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருக்கிறதா என அவர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் அர்ச்சகர்கள் என 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறியும் பரிசோதனையும் நடைபெற்று வந்தது.

அதேபோல அவர்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அர்ச்சகர்களின் தயார் உயிரிழந்துள்ளார். கொரோனா உயிரிழப்பு வழிகாட்டுதல்படி உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்களும் வெளியாகியுள்ளன. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |