கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை இன்று காலை பரிதமாக உயிரிழந்தது. மலபுரத்தை சேர்ந்த 4 மாத குழந்தைக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பலியாகியுள்ளது.
கடந்த 3 மாதங்களாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாகவும் அதன் காரணமாக சிகிக்சை பெற்று வந்ததாகவும் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சலும் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதில், மகராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு, மத்தியபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 447 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கேரளா மாநிலம் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது எனறு தான் சொல்ல வேண்டும். இதுவரை, 316 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், 129 பேர் கொரானா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, கேரளாவில் மற்ற மாநிலங்களை விட உயிரிழப்புகள் குறைவு தான்.
இதுவரை 3 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை ஒரு குழந்தை கொரோனாவால் மரணமடைதிருப்பது மிகவும் வேதனையை தருகிறது. இதையடுத்து கேரளாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.