50 வயதுக்கு உட்பட்டவர்களின் உடலில் கொரோனா என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றிய தொகுப்பு
சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆய்வு கொண்டதன் மூலம் கூறிய கருத்துக்கள்
மூளையில் ரத்தத்தை உறையச் செய்கிறது
30 அல்லது 40 வயதுடையவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்னனர். மருத்துவ குறைபாடு இல்லாதவர்கள், லேசான அறிகுறி அல்லது அறிகுறி கட்டாதவர்களுக்கும் மூலையில் ரத்தத்தை உறைய செய்யும். இதனால் பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்கு அவசர சிகிச்சை கொடுக்காவிட்டால் மரணம் ஏற்படும்.
பக்கவாதம் என்றால் என்ன?
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் நின்று விட்டால் மூளையில் உள்ள செல்கள் மரணமடைந்துவிடும்.அவ்வாறு செல்கள் இறந்தால் அவை இயக்கும் உடல் பாகங்கள் செயல்படாது. அதாவது மூளையில் ஏற்படக்கூடிய விபத்து இது.
பக்கவாதத்தின் அறிகுறிகள்
முகம், கை, பேச்சு இந்த மூன்றிலும் ஏதேனும் மாறுபட்ட அறிகுறிகள் தென்பட்டால் அது பக்கவாதத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
கொரோனா அறிகுறிகள்
தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல், பக்கவாதம். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியம்.