பஞ்சாயத்துராஜ் திவாஸ் (PanchayatiRajDiwas) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இ-கிராம்ஸ்வராஜ் போர்டல் மற்றும் மொபைல் பயன்பாட்டை திறந்து வைத்தார்.
இன்று காலை 11 மணி அளவில், பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சர்பஞ்ச்ஸுடன் (பஞ்சாயத்து அமைப்புகளுடன்) ஆலோசனையை தொடங்கினார். அந்த நிகழ்ச்சியில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் கலந்து கொண்டார், மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் இரண்டு திட்டங்களை திறந்து வைத்தார்.
1992-ம்ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி கிராம அளவில் உள்ளாட்சி அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுவார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த திட்டங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அப்போது, பேசிய பிரதமர் மோடி, ” கொரோனா வைரஸ் தொற்று நாம் சுய சார்புடையவர்களாக மாற வேண்டும் என்று கற்பித்திருக்கிறது” எனக்கூறினார். ” இந்தியாவில் உள்ள கிராமங்கள் சமூக தூரத்தை எளிமையாக வரையறுக்கவும், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் – ‘டூ காஜ் டோர்ரி’ என்ற மந்திரத்தை வழங்கியுள்ளன. இப்போது, தொலைத்தொடர்பு 1.25 லட்சத்திற்கும் அதிகமான பஞ்சாயத்துகளை எட்டியுள்ளது. அது மட்டுமல்லாமல், கிராமங்களில் பொதுவான சேவை மையங்களின் எண்ணிக்கையும் மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது” என தெரிவித்தார்.