கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுடன் காணொலி காட்சி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த பஞ்சாயத்துராஜ் திவாஸ் (PanchayatiRajDiwas) நிகழ்ச்சியில், இ-கிராம்ஸ்வராஜ் போர்டல் மற்றும் மொபைல் பயன்பாட்டை மோடி திறந்து வைத்தார்.
இரு திட்டங்களை திறந்து வைத்த பின்னர் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது என்றும், நாம் அனைவரும் வேலை செய்யும் முறையையே மாற்றிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாம் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை கொரோனா வைரஸ் தொற்று சுட்டிக்காட்டியுள்ளது எனக்கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நாம் சுய சார்புடையவர்களாக மாற வேண்டும் என்று கற்பித்திருக்கிறது எனக்கூறினார். இந்தியாவில் உள்ள கிராமங்கள் சமூக தூரத்தை எளிமையாக வரையறுக்கவும், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் – ‘டூ காஜ் டோர்ரி’ என்ற மந்திரத்தை வழங்கியுள்ளன.
இப்போது, தொலைத்தொடர்பு 1.25 லட்சத்திற்கும் அதிகமான பஞ்சாயத்துகளை எட்டியுள்ளது. அது மட்டுமல்லாமல், கிராமங்களில் பொதுவான சேவை மையங்களின் எண்ணிக்கையும் மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நாம் தீவிரமாக இறங்க வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.