Categories
அரசியல்

ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் பரிசோதனை செய்வதை தற்காலிகமாக நிறுத்துங்க: கே.எஸ் அழகிரி!

கொரோனா பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் ஆலோசனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அதேபோல ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டறியும் அதிவிரைவு கருவிகள் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தற்போது பல்வேறு மாநிலங்களில் சோதனை செய்யப்பட்டு வந்தது.

சுமார் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஏற்கனவே, மேற்குவங்கத்தில் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யவில்லை என புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்த கிட்கள் தவறான முடிவுகளை தெரிவிக்கிறது என்ற புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், தவறான முடிவுகளை தருவதாக சில மாநிலங்கள் கூறியதாக 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ கவுன்சில் தெரிவித்திருந்தது.

2 நாட்கள் நடத்திய ஆய்வில், கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் கிட்டை பயன்படுத்தவேண்டும் என்றும், கொரோனாவை கண்டறிய பிசிஆர் கருவிகள் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் கே.எஸ்.அழகிரி கோரிக்கை வைத்துள்ளார்.

Categories

Tech |