கொரோனா வைரஸ் நாம் உடுத்தும் உடைகளில் கூட கிருமி இருக்கும் அதனால் துணிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தொற்றுநோயால் எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். உலக சுகாதார அமைப்பின் மருத்துவம் கூறும் அறிவுரை படி, வைரஸ் பரவுவதைத் தடுக்க நம் கைகளை அடிக்கடி கழுவுவதும், சமூக விலகலை கடைப்பிடிப்பதும் தான் அவசியம்.
கொரோனா வைரஸ் துணி உள்ளிட்ட குறிப்பிட்ட மேற்பரப்புகளில் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் கூட உயிர் வாழும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம்முடைய தனிப்பட்ட சுகாதாரப் பழக்கத்தை மேம்படுத்த முடிந்தாலும், வைரஸை சுமக்கும் கேரியர்களாக இருக்கக்கூடிய நமது ஆடைகளின் மேற்பரப்புகளைப் பற்றியும் நாம் கவனமாக இருக்க வேண்டும். தொற்றுநோய் பரவும் காலக்கட்டத்தில் ஆடைகளை எப்படி பாதுகாப்பாக துவைக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் அணியும் துணிகளின் மூலம் கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறதா.?
துணிகள் மூலம் வைரஸ் பரவுமா என்ற கேள்விக்கு துரதிர்ஷ்டமாசமாக பதில் ஆம் என்பதுதான். ஆனால் கெட்டதிலும் ஒரு நல்ல விஷயமாக துணி போன்ற மென்மையான பொருட்கள் மூலம் வைரஸ் பரவுவது மிகக் குறைவு என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். தொற்றுநோய் பரவும் போது எப்படி பாதுகாப்பாக சலவை செய்ய வேண்டும்.
நீங்கள் வெளியில் இருந்து வீடு திரும்பியவுடன் சீக்கிரமே துணிகளைக் துவைத்து விடுங்கள். நாடு முழுமையான பூட்டப்பட்ட நிலையில் இருந்தாலும், மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்குச் செல்லலாம். துணியின் மேற்பரப்புகள் வைரஸைப் பிடிக்கக்கூடும், உங்கள் ஆடைகளை மாற்றிக்கொண்டு வீடு திரும்பிய உடனேயே நீங்கள் அணிந்திருந்தவற்றை துவைக்க வேண்டும்.
உங்கள் துணிகளை உடனடியாக கழுவ முடியாவிட்டால், அவற்றை உடனடியாக ஒரு தனி சலவை பையில் அல்லது சலவை இயந்திரத்தில் வைக்கவும் – துணிகளைக் கழுவுவதற்கு வெளியே எடுத்தபின் நீங்கள் சரியாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும்
சீக்கிரமே சுத்தம் செய்து கொள்வது:
ஆடைகள், மற்ற கடினமான மேற்பரப்புகளைப் போலன்றி, வைரஸைக் கட்டுப்படுத்தக்கூடிய அடுக்குகளைக் கொண்டுள்ளன. ஈரமான சோப்பில் தேய்ப்பது போன்ற ஒரு அதிவேக செயல்பாட்டில் துணிகளை சரியாக கழுவ வேண்டியது அவசியம். ஆடையின் மேற்பரப்பை சுத்தம் செய்வது மட்டும் போதாது. முடிந்தால், துணிகளைக் துவைப்பதற்கு முன் சோப்பு நீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும், குறிப்பாக நீங்கள் ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் இதனை கண்டிப்பாக செய்ய வேண்டியது அவசியமாகும்.
வெந்நீரில் துவைக்க வேண்டும்:
நோய் கட்டுப்பாட்டு மையத்தின் கூற்றுப்படி, சரியான வெப்பநிலையில் இருக்கும் நீரில் உங்கள் துணிகளைக் கழுவுவது நல்லது. துணிகளை முறையாக கிருமி நீக்கம் செய்ய, தண்ணீரின் வெப்பநிலை 40 முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும் என்று இங்கிலாந்தில் உள்ள சி.டி.சி பரிந்துரைக்கிறது. கடினமான மற்றும் நல்ல தரமான சோப்பு பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. உங்களிடம் ஒரு சலவை இயந்திரம் இல்லையென்றால், உங்கள் துணிகளை கை கழுவினால் அதிக வெப்பநிலை நீர் மிகவும் முக்கியமானது.
கையுறைகள்:
ஒருவேளை நீங்கள் நோய்வாய்ப் பட்டவரின் உடைகளை துவைக்க கூடிய நிலை வந்தால் ஒவ்வொரு முறையும் துவைக்கும் போது அப்புறப்படுத்தக்கூடிய கையுறைகளை பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ளவும். மீண்டும் உபயோகிக்கக்கூடிய கையுறைகளை பயன்படுத்தினால் அவற்றை துணி துவைக்க மட்டும் பயன்படுத்தவும். அவற்றை மற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது. கையுறைகள் அகற்றப்பட்ட உடனேயே கைகளை கழுவ வேண்டும். அழுக்கு உடைகளை கையாளும் போது கையுறைகள் எதுவும் பயன்படுத்தப்படாவிட்டால், எப்போதும் கைகளை கழுவ வேண்டும்.