Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை – ஓபிஎஸ் வேண்டுகோள்!

கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸை வெற்றி கொள்ள நாம் நடத்தும் போரில் பொதுமக்கள் அரசுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.

மக்களின் உயிரை காக்க தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது உழைத்து கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு தமிழக அரசு தலைவணங்குகிறது என அவர் கூறியுள்ளார். மக்களின் வேதனைகளை நீக்க வேண்டும், அதனால் ஏற்படும் சோதனைகளை மாற்ற வேண்டும் என்பது தான் அரசின் ஒரே லட்சியம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை 15வது நிதிக்குழுவிடம் எடுத்துரைத்து மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என உறுதியளித்துள்ளார். தமிழகம் நிதி உரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது என ஸ்டாலின் கூறியது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்றும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்

Categories

Tech |