கொரோனாவில் மீண்ட சீனாவில் மற்றொரு நகரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஊரடங்கு பிறப்பித்து தான் அந்நாடு கட்டுப்படுத்தியது. இப்போது அந்நகரில் பல்வேறு சேவைகள் தொடங்கியுள்ள நிலையில் உஹானை தொடர்ந்து மற்றொரு நகரத்தை சீன அரசு முழுவதும் முடங்கியுள்ளது. சீனாவின் ஹார்பின் நகரம் கொரோனாவால் மிகவும் மோசமடைந்துள்ளது. அங்கு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருந்து வந்த 25 வயது மாணவன் மூலமாக 70 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
அதே போல அண்டை நாடான ரஷ்யாவில் இருந்து வந்த பலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனால் அந்த அந்த மாகாணம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. வெளி மாகாண பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளி நாடுகள், வெளி மாகாணத்தில் இருந்து வந்த அனைவரையும் 28 நாட்கள் தனிமைப்படுத்தச் சொல்லி, மூன்று கட்ட பரிசோதனை நடத்தவும் சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இன்று உலகமே கொரோனாவால் வேட்டையாடப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கி, உஹான் போல மற்றொரு நகரம் முடக்கப்பட்டுள்ள செய்தி உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மூன்று மாதங்கள் ஊரடங்கு பிறப்பித்து கொரோனவை கட்டுக்குள் வைத்திருந்த சீனாவில் தற்போது புதிதாக இன்னொரு மாகாணம் கொரோனா பிடியில் சிக்கியுள்ளது என்றால் அது எப்படி பரவி வருகின்றது என்று உணர்த்துகின்றது.