இந்தியாவில் 90 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தற்போது பல்வேறு மாவட்டங்களில் இதனுடைய பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவைப் பொருத்தவரையில் 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாகவும், 12 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாகவும், கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 21,393 பெயர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், 90 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பே இல்லை என்ற செய்தி ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.