இந்தியாவில் 100 நகரங்களில் அமேசான் நேரடி விற்பனை நிலையங்களை அமைக்க உள்ளது.
பேஸ்புக் நிறுவனமானது, ஜியோ ரிலையன்ஸ் உடன் இணைந்து இந்தியாவில் ஜியோ மார்ட்டை மேம்படுத்தி வருகிறது. இது முற்றிலும் சிறு குறு தொழில் செய்பவர்களை ஆன்லைனில் விற்பனை செய்ய வைப்பதற்கான ஒரு முறையாகும். இதன் மூலம் சிறு குறு தொழில் செய்வோர்கள் எந்தவொரு முதலீடும் இன்றி,
ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய முடியும் அல்லது குறைந்த அளவிலான செலவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இந்நிலையில் பின்னாளில் வரக்கூடிய வர்த்தகப் போட்டியை கணக்கில் கொண்டு ஜியோ மார்ட்டை சமாளிக்க அமேசான் நிறுவனம் இந்தியாவில் 100 முக்கிய நகரங்களில் நேரடி விற்பனை நிலையத்தை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.