மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்கள் மே 2,3 ஆம் தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் சமூக விலகலை கடை பிடிக்காததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பல்வேறு சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஆகையால் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பொது மக்கள் டோக்கன் அடிப்படையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும்,
அந்த டோக்கன்கள் இன்றும், நாளையும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்ததையடுத்து, தேதி மாற்றப்பட்டு இருப்பதாகவும், வருகின்ற மே 2, 3 தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் என்றும், மே 4 முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மக்கள் டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள அறிவுரைப்படி நடந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.