ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை மனிதர்கள் மீது பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரவும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலகநாடுகள் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்,
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து மனிதர்கள் மீது அதை பரிந்துரைக்க அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், தற்போது மனிதர்களின் மீது தடுப்பு ஊசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி கட்டாயம் வெற்றி பெறும் என பலர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.