சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார்.
முழு ஊரடங்கு காலத்தில் எதெற்கெல்லாம் அனுமதி :
- மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும்.
- அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும்.
- கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும்.
- முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு அனுமதி.
- தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் உணவுக்கு மட்டுமே அனுமதி.
- முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி.
- முழு ஊரடங்கு காலத்தில் ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்.
- அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை இயங்கும்.
- ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.
- மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம்.
- ஆதரவற்றோருக்கு மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும்.
- ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் அரசு அலுவலரின் அனுமதியுடன் இயங்கலாம்.
செயப்படாதவைகள் :
- ஏப்., 26 முதல் ஏப்.,29 வரை ஏற்கனவே வழங்கப்பட்ட பிற கடைகளுக்கு அனுமதி இல்லை. எனவே, காய்கறி மற்றும் மளிகைக் கடைகளும் இந்த நாட்களில் திறக்கப்படாது.
- பத்திரப்பதிவு உட்பட மற்ற அரசு அலுவலங்கள் செயல்படாது
- தனியார் நிறுவனங்கள் செயல்படாது.
- சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களை தவிர பிற பகுதிகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.