Categories
திருச்சி மாநில செய்திகள்

இன்று முதல்…… முழு ஊரடங்கு…… எந்த கடையும் கிடையாது…. மாநகர ஆட்சியர் அதிரடி….!!

திருச்சியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இன்று முதல்திங்கள் கிழமை வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டுமே பொது மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் இதனை காரணமாக வைத்து வெளியே வரும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஆங்காங்கே மாநகராட்சிகளும், நகராட்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சேலம் மாநகராட்சியில்,

இன்று பிற்பகல் ஒரு மணி முதல் வருகின்ற திங்கட்கிழமை வரை முழு ஊரடங்கை கடைப்பிடிக்கப்பட உள்ளதாகவும், மருந்து கடைகள், மருத்துவமனைகள் தவிர வேறு எதுவும் திறக்கப்படாது எனவும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |