Categories
மாநில செய்திகள்

கோவை இணையதள பத்திரிகையாளர் தாக்குதல் : உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? – கமல் கேள்வி!

கோவை இணையதள பத்திரிகையாளர் தாக்குதலை கண்டித்துள்ள கமலஹாசன், உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கும், கோவையில் பயிற்சி மருத்துவர்கள் உணவிற்கு சிரமம் அடைந்துள்ள செய்தியையும், கோவையில் உள்ள ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்களை கொள்ளையடிப்பதாக வந்த குற்றச்சாட்டை செய்தியாக வெளியிட்டதற்காக ஆன்லைன் மீடியா இருவரை கோவையில் போலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/ikamalhaasan/status/1253606497981837312

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமலஹாசன், கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |