Categories
உலக செய்திகள்

இந்தியர்களே அதிக மரணம்…. இங்கிலாந்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல் …!!

இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு பலியான சிறுபான்மையினரில்  இந்தியர்களே அதிகம் என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்

இங்கிலாந்தில் கடந்த 17-ந்தேதி நிலவரப்படி கொரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13918 ஆகும். இறந்தவர்களின் இனவாரியான புள்ளிவிபரங்களை இங்கிலாந்து தேசிய சுகாதார துறை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இறந்தவர்களில் 16.2 சதவீதம் சிறுபான்மையினர் ஆவார்கள்.

இவர்களில் 3 சதவீதம் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2.9 சதவீத கரீபியன் நாட்டினர்களும், 2.1 சதவீத பாகிஸ்தான் நாட்டினர்களும், 1.9 சதவீத ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களும், 0.4 சதவீத சீனாவை சேர்ந்தவர்களும், 0.6 சதவீத வங்க தேசத்தினர்களும், 0.9 சதவீத இதர கருப்பின பின்னணியை கொண்டவர்களும், 1.9 சதவீத மற்ற ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களும் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் இறந்த தேசிய சுகாதார பணியாளர்கள் மொத்த எண்ணிக்கை 69 ஆகும். இதில் சிறுபான்மை ஊழியர்கள் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். இந்திய டாக்டர் மஞ்சீத்சிங் ரியாத்தும் அவர்களில் ஒருவர். இங்கிலாந்தின் மக்கள் தொகையில்  சிறுபான்மையினர் 13 சதவீதம். ஆனால், கொரோனா பலி எண்ணிக்கையில் 16.2 தாண்டி சதவீதம்பேர் இறந்து இருப்பதாக  இங்கிலாந்து சுகாதார மந்திரி மட் ஹங்கோக் வேதனை தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர்கள் அதிகம் பேருக்கு வைட்டமின் பற்றாக்குறை, இதய கோளாறு, மரபணு கோளாறு,  நீரிழிவு ஆகிய உடல்நல பிரச்சினைகள் அதிகமாக இருப்பதாலும் , சமூக இடைவெளியை சரியாக கடைப்பிடிக்காததும் தான் அவர்கள் பலி எண்ணிக்கை அதிகமாக காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |