Categories
உலக செய்திகள்

வறுமையா? அல்லது இந்த 2 நோயா?… மரணத்தின் பிடியில் ஜிம்பாப்வே!

ஜிம்பாப்வேவில் அதிக உயிர் பலியை எடுக்கப் போவது கொரோனாவா? மலேரியா? வறுமையா? எனும் அச்சத்தில் நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர்

ஆப்பிரிக்கா நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜிம்பாப்வே சுமார் 1.50 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. அந்நாட்டில் வழக்கமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா நோய் பரவி நாட்டு மக்களை ஒரு பாடுபடுத்தும். கடந்த சில ஆண்டுகளாகவே மலேரியாவின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் கடந்த மூன்று மாதங்களில் 1.35 லட்சம் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு 153 பேர் மரணமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மலேரியாவுடன் சேர்ந்து ஜிம்பாப்வேயை கொரோனா தொற்றும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதுவரை அந்நாட்டில் அதிகம் பரவாத கொரோனா இனி வேகமாக பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கொரோனா தொற்றினால் 28 பேர் பாதிக்கப்பட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முன்னதாகவே உலக சுகாதார நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அதிபர் எமர்சன் அந்நாட்டில் மார்ச் இறுதியிலேயே மூன்று வாரகால ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதோடு கடந்த 19 ஆம் தேதி அன்று மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்க படுவதாக தெரிவித்துள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஒரு கோடி மக்கள் வேலையின்றி பட்டினி கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அதிக உயிர் பலியை எடுக்கப் போவது கொரோனாவா? மலேரியாவா? வறுமையா? எனும் அச்சத்தில் நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர்

Categories

Tech |