தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 26 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. சென்னை – 52 , கோவை – 7, மதுரை – 4 , ராமநாதபுரம் – 2 , திருவள்ளுர் – 2 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், சேலம், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலையில் தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 23,505 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 19 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். 87, 159 பேர் வீட்டு கண்காணிப்பை முடித்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 886ஆக உள்ளது.