Categories
உலக செய்திகள்

வாய்ப்பில்ல… “இந்தாண்டு முழுவதும் லாக் டவுன்”… தலைமை மருத்துவ ஆலோசகர்!

இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதிவரை ஊரடங்கு தொடரும் வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 210 நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இங்கிலாந்தில் இதுவரை 1,38,078 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18738 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா  பரவுவதைக் கட்டுப்படுத்த நடைமுறையில் இருக்கும் சமூக விலகல் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டின் இறுதி வரை தொடரும் என அந்நாட்டின் தலைமை மருத்துவ ஆலோசகர் கிறிஸ் விட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் பின்னர் வாழ்க்கை உடனடியாக இயல்பு நிலைக்கு மாறிவிடும் என நினைப்பது முழுக்க முழுக்க சாத்தியமில்லாதது.  அதிக அளவு பயன்தரக்கூடிய மருந்துகள் மற்றும் தடுப்பு ஊசி இருந்தால் மட்டுமே தற்போது இருக்கும் சூழ்நிலையை மாற்றி அமைக்க முடியும். ஆனால் அடுத்த ஆண்டிற்குள் அதனை கண்டுபிடிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |