மீனம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாக அமையும். யோசிக்காமல் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் கூட நல்ல வெற்றி கிடைக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை நீங்கள் வாங்க கூடும் .உங்களின் உயர்ந்த எண்ணத்தால் அனைவரையும் நீங்கள் கவருவீர்கள். எதிர்பாராத வகையில் தனலாபம் வந்து சேரும்.
எந்த ஒரு விஷயத்திலும் முடிவுகள் நீங்கள் தெளிவாக எடுக்கக் கூடும்.ஆனால் செய்யக்கூடிய வேளைகளில் மட்டும் கவனம் இருக்கட்டும்.அலட்சியம் தயவுசெய்து வேண்டாம்.பண வரவு சிறப்பை கொடுக்கும். நண்பர்கள் பிரச்சனையில் தலையிடும் போது ரொம்ப கவனமாக பேசுங்கள். தயவுசெய்து பஞ்சாயத்துக்களில் ஒதுங்கி இருப்பது ரொம்ப நல்லது.
தேவையில்லாத வீண் செலவுகள் ஏதும் இன்று செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாகவும் சிறப்பாகவும் பணிகளை செய்வார்கள், அதனால் அவர்கள் பாராட்டுக்களைப் பெறுவார்கள் உயர் பதவிகள் கிடைக்க கூடிய வாய்ப்புக்கள் இன்று உண்டு. சக பணியாளர்கள் ஆதரவாக உங்களுக்கு இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணம் ஆக இன்றைய நாள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகளும் நடக்கும்.
காதலர்களுக்கு இன்று பொன்னான நாளாக இருக்கும் ஆனால் காதலர்கள் கோபம் மட்டும் படக் கூடாது. மிக முக்கியமாக வாக்குவாதத்தில் ஏதும் ஈடுபடக்கூடாது.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெறும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை