கும்பம் ராசி அன்பர்களே …!! வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாளாக அமையும்.கூட்டுத்தொழில் உங்கள் கருத்துக்களை கூட்டாளிகள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் தான். மனக்குழப்பம் அதிகரிக்கும். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாகத்தான் கிடைக்கும்.மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு பின்னர் விலகிச் செல்லும்.
வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் பொழுது கவனமாக இருங்கள். பாக்கிகள் வசூலாவதில் தாமதமாகத்தான் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உச்சத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். கவனமாக வேலைகளை செய்யுங்கள். தீ ,ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக தான் பயன்படுத்த வேண்டும். இன்று கடின உழைப்பு வெற்றியை தேடி தரும்.
தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும் கவலை வேண்டாம். பணவரவை பொருத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. காதலர்களுக்கு இன்று உன்னதமான நாளாக அமையும். கோபப்படாதீர்கள் வாக்குவாதத்தில் தயவுசெய்து ஈடுபடாதீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு தானமாக கொடுத்தால் உங்களுடைய தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 8
அதிஷ்ட நிறம்: பழுப்பு மற்றும் பிரவுன் நிறம்