தனுசு ராசி அன்பர்களே ..! இன்றைய நாள் தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளை மட்டும் தயவு செய்து இப்போதைக்கு வேண்டாம்.சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும்.
எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும்,கவலை வேண்டாம். கூடிய விரைவில் எல்லாம் பிரச்சனைகளும் சரியாகிவிடும். அடுத்தவர் பிரச்சினையில் மட்டும் தலையிடுவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டும்.அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு வெற்றியை தேடிக் கொடுக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.
இலட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவம் நடக்கும். நிதானம் மட்டும் எப்போதும் இருந்து விட்டால் உங்களை எந்த காலத்திலும் அசைக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் இறை வழிபாட்டுடன் நின்று காரிகளை தொடங்குங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். இன்று உற்றார் உறவினர் வகையில் சிறுசிறு தொல்லைகள் அவ்வப்போது ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். வரவு இருந்தாலும் செலவுகளும்
எப்பொழுதுமே உங்களைப் பொறுத்தவரை கட்டுக்கடங்காமல் தான் செல்லும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்தால் மிகச்சிறப்பாக இருக்கும். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டமாக இருக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில்தோஷம் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.