Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…பயணங்களை தவிர்க்கவும்…ஆரோக்கியத்தில் கவனம் தேவை…!!

 

 

கன்னி ராசி அன்பர்களே …!!  உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாளாக இருக்கும். பதவியில் உள்ளவர்களின் உதவிகள் கிட்டும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பிறருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும் அதனால் இன்று பெருமூச்சி அடைய வழிகள். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்கும்போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது.

புதிய முயற்சிகளில் தாமதம் கொஞ்சம் ஏற்படலாம். எதிர்பார்த்த காரிய வெற்றியும் உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் உங்களுக்கு கைகொடுக்கும் பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும் கவலை வேண்டாம். சரியான நேரத்திற்கு உங்கள் கையில் வந்து சேரும் மற்றவருடன் வீண்  வகைகளைத் தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருந்தால் கொஞ்சம் கவனமாகத்தான் செல்ல வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இருக்கக் கூடிய சூழ்நிலையில் பயணங்கள் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் தேவையற்ற சண்டை  ஏற்படக்கூடும். அதையெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். சிறு சிறு சண்டைகள் ஆகவும் சிறுசிறு பிரச்சினைகள் ஆகும் அது விலகிச் செல்லும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாககொடுத்தால் உங்களுடைய வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள்:  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |