சிம்மம் ராசி அன்பர்களே …!! பெண் நண்பர்கள் உதவியால் நலம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். முன்கோபத்தை தவிர்த்தால் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப ரகசியங்களை தயவு செய்து வெளியில் சொல்லாது இருப்பது ரொம்ப நல்லது. அது தான் உங்களுக்கு புத்திசாலித்தனமும் கூட. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுங்கள்.
அடுத்தவரின் உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். செயல்திறன் அதிகரிக்கும். கணவர் மனைவிக்கிடையே திடீர் என்று கருத்து வேற்றுமை ஏற்பட்டு பின்னர் சரியாகும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றங்கள் கூட ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுங்கள் அவரிடம் எந்தவித எதிர்பார்ப்பும் ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது.
வாகனத்தில் செல்லும்போதும் பயணங்களின் போதும் ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். புதிய நபரிடம் கொஞ்சம் விலகியே இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீலம் நீல நிறம்