Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…பொறுப்புகள் அதிகரிக்கும்…பணவரவு திருப்தியளிக்கும்..!!

 

மிதுனம் ராசி அன்பர்களே …!!  இன்று நினைத்தது நிறைவேறும் நாள் ஆக இருக்கும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்று பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். விருந்தினர் வருகை இருக்கும் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் பொழுது நூறு முறைக்கு பல முறை யோசித்து மட்டும் நல்லது. மற்றவரிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. யாருடைய பிரச்சினையிலும் தயவுசெய்து மூக்கை நுழைக்க வேண்டாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும்.கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் குறையும்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.இன்று காதலர்களுக்கும் நல்லதாகவே அமையும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சும் உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

Categories

Tech |