மேஷம் ராசி அன்பர்களே …! இன்று பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஏட்டிக்கு போட்டியாக செயல்பட்டவர்கள் உங்களுடைய குணமறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் முன்னேற்றம் கருதி புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றியும் பெறக்கூடும். குடும்பத்தில் பிரச்சினை தலைதூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
மிகவும் கவனமாகக் கையாண்டால் அந்த பிரச்சினை தீரும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்களுடைய ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கலாம். பணவரவு ஓரளவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பணவரவில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் ஏற்படும். இறை வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தையும் இன்று கச்சிதமாக செய்து முடிப்பீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள்.உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் எப்போதுமே இருக்கலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்