ராஜஸ்தானில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அஜ்மீரில் – 8,2 தோல்பூரில் – 2, துங்கர்பூரில் – 1, ஜலாவர் & ஜோத்பூர் – தலா 5 மற்றும் கோட்டாவில் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,059ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தானில் இதுவரை 32 பேர் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்துள்ள நிலையில் 493 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாட்டில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மொத்த இறப்புகள் எண்ணிக்கை 775 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18,668 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5063ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நிலையிலும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே செல்வது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.