Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கூடுதல் டைம் எடுத்துக்கோங்க….!! ”குஷி படுத்திய முதல்வர்” அதிரடி உத்தரவு போட்டு அசத்தல் …!!

நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் பகுதிக்கு முதல்வர் தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூ மாநகராட்சி பகுதியிலும், திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிகளில் கூடினர். பல பகுதிகளில் சமூக விலகல் மீறப்பட்டுள்ளது என்றெல்லாம் புகார்கள் எழுந்தன.

இன்று பிற்பகல் 1 மணியோடு கடைகளை அடைக்கப்படும் அதற்குள் 4 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட வேண்டும் என்பதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள கடைகளை, அத்தியாவசிய தேவை பொருட்களை விற்கும் கடைகள் மாலை  3 மணி வரை திறந்து இருக்கலாம் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்திருந்தது.இதனையடுத்து தமிழக முதல்வர் முதல்வர் சார்பிலும் இது குறித்த ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூ மாநகராட்சி பகுதியிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் 3 மணி வரை செயல்படும் என்ற விரிவான உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார். அதேபோல பொதுமக்களை பொருட்களை வாங்கிச் செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றி, முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |