தூத்துக்குடியில் கொரோனா பாதித்த 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்முடைய மருத்துவரின் மகத்தான சேவையை பிரதிபலிக்கின்றது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூகவிலகலே சிறந்த தீர்வு என்ற வகையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 1755 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் மரணமடைந்து, 867 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து 16 பேர் குணமடைந்து விடு திரும்பி இருந்த நிலையில் இன்று மேலும் 2 பேர் குணமடைந்ததால் 18 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இறந்ததால் 8 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல நெல்லையில் 7 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.