உலகளவில் கொரோனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் 2,833,079 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழப்புகள் எண்ணிக்கை 1லச்சத்து 97 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தூண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 7 ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழவைத்தாராம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன.
அமெரிக்காவில் பாதிப்பு நிலவரம்:
இந்த நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 9 லட்சத்து 25 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனவால் 52,217 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனா பிடியில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 432 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா அதிகம் பாதித்த பிற நாடுகள்:
* ஸ்பெயினில் 219,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,524 பேர் உயிரிழந்துள்ளனர். 92,355 பேர் குணமடைந்துள்ளனர்.
* இத்தாலியில் 192,994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,969 நோயாளிகள் உயிரிழந்துள்ளார். 60,498 பேர் குணமடைந்துள்ளனர்.
* பிரான்சில் 159,828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,245 நோயாளிகள் உயிரிழந்துள்ளார். 43,493 பேர் குணமடைந்துள்ளனர்.
* ஜெர்மனியில் 154,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,760 பேர் உயிரிழந்துள்ளனர். இது மற்ற நாடுகளை விடக் குறைவு. 109,800 பேர் குணமடைந்துள்ளனர்.