தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து அந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாத காலம் பணி நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிடுள்ளார். ஒப்பந்த முறையில் இரண்டு மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடுகிறார்.
மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஒப்பந்த முறையில் இரண்டு மாத காலத்திற்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை கிடைத்தும் பணியில் சேரலாம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.