இந்தியாவில் அதிகாரிகள் அலட்சியத்தால் 4 வயது குழந்தையை உயிருடன் பன்றிகள் சாப்பிட்ட கொடூர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கும் சைதாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாலை 4 மணியளவில் சிங்காரேனி காலனியில் இருக்கும் தனது வீட்டிலிருந்து விளையாடுவதற்கு 4 வயது ஹர்ஷவர்தன் என்ற சிறுவன் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த காட்டுப்பன்றிகள் சிறுவனை தாக்கி இழுத்துச் சென்று உடல் பாகங்களை சாப்பிட்டு உள்ளது.
குழந்தையின் சடலத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க காவல்துறையினர் விரைந்து வர சிறுவனின் பெற்றோரும் வந்து உடலை அடையாளம் காட்டியுள்ளனர். உடலை விரைந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவத்திற்கு முன்னரே அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்கள் காட்டுப் பன்றிகளின் ஆக்கிரமிப்பு தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சிறுவன் பன்றிகளுக்கு இறையானதை தொடர்ந்து உள்ளூர் பாலாலா ஹக்குலா சங்கம், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் சிறுவனின் மரணத்தில் ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் பொறுப்புக்கு குற்ற வழக்கு பதிவு செய்தாக வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.