அணு ஆயுதங்கள் ஏதுமின்றி வைரசை பரப்பி சீனா மூன்றாம் உலகப்போரை தொடங்கியுள்ளது என அமெரிக்கா அரசியல் நிபுணர் தெரிவித்துள்ளார்
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர்களை எடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா உட்பட பல நாடுகளும் சீனா திட்டமிட்டு தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தி வரும் நிலையில் சீனாவின் திட்டம் குறித்து சர்ச்சை வலுப்பெற்றுள்ளது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்று 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மூன்றாம் உலகப்போரை சீனா அணு ஆயுதமும் இல்லை வேறு எந்த ஆயுதமும் இல்லாமல் வைரஸ் கிருமி மூலமாக தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிக பலம் வாய்ந்த ராணுவத்தை கொண்ட அமெரிக்காவே இந்த தொற்றினால் 50,000 உயிரை பறிகொடுத்துவிட்டது. அதிலும் லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உலகில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து அதனை மண்டியிட வைப்பதோடு அடுத்த 20 ஆண்டுகளில் உலகில் மிகப்பெரிய வல்லரசாக சீனா தன்னை வளர்த்துக் கொள்வதற்காகவே வைரஸ் தொற்றை பரப்பி இருப்பதாக அமெரிக்க அரசியல் நிபுணர் கிரகாம் ஆலிசன் கருத்து தெரிவித்துள்ளார்.