Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 94 பேர் டிஸ்சார்ஜ்… மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 94 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது.தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் மாலை தோறும் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821 ஆக அதிகரித்துள்ளது.  இன்று ஒரே நாளில் 94 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை மொத்தம் 960 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று 34 வயது இளைஞர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது” என்றார். இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 66 அதிகரித்தாலும், ஒரேநாளில் 94 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக இருக்கிறது..

Categories

Tech |