Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று… பாதிப்பு எண்ணிக்கை 1,821ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 43, காஞ்சிபுரம் – 7, தென்காசி – 5, மதுரை – 4, பெரம்பலூர் -2,விருதுநகர் – 2 பேருக்கு செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தி தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 94 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை 960 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 495ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை 37ல் இருந்து 41ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |